காதலியின் கண்களை பிடுங்கிய கொடூர காதலன்

0
Woman hand holding bloody knife

Maisons-Alfort (Val-de-Marne) இல் ஒரு நபர் தனது காதலியின் கண்களைதோண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒரு பெண் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து அருகில் வசிப்பவர்கள் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

13:37 மணியளவில் பொலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் வீட்டிற்கு வந்தனர்.

அங்கு ஒரு பெண் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

அவரது தலை மற்றும் கால்களுக்கு இடையில் கத்தியால் குத்தப்பட்டது.

மற்றொன்று, அந்தப் பெண்ணின் கண் பிடுங்கப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

உடனடியாக அந்தப் பெண் மீட்கப்பட்டு க்ரெட்டில் உள்ள ஹென்றி-மண்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பெண் 15 செ.மீ நீளமுள்ள சமையலறைக் கத்தியால் குத்தப்பட்டதாகவும், 1981 ஆம் ஆண்டு பிறந்த அவரது காதலன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here