காதலியின் ஆசையை நிறைவேற்ற காதல் செய்த செயலால் பெரும் பரபரப்பு

0

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் சித்ரகூட் நகரில் வசித்து வரும் அவினாஷ்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இரவு நேரத்தில் இருவரும் சந்தித்து பேசிகொண்டிருக்கும் போது, அவினாஷின் காதலி சாக்லெட் சாப்பிட வேண்டும் எனக் கூறி அதனை உடனே வாங்கிவருமாறும் கட்டாயப்படுத்தியுள்ளார்.

நடு இரவில் கடை கடையாக திரிந்தும் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வேறுவழியின்றி காதலியின் ஆசையை நிறைவேற்ற அப்பகுதியில் இருந்த கடையின் பூட்டை உடைத்து, கடைக்குள் வைத்திருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து ரூ5 முதல் ரூ 300 வரையிலான ரூ.20.000 பெறுமதியான 700 சாக்லெட்டுகளை திருடி தன் காதலிக்கு பரிசாளித்துள்ளார்.

அதையடுத்து பொலிஸார் அவினாஷை கைது செய்து விசாரித்ததில் தன் காதலியின் ஆசையை நிறைவேற்ற நண்பனின் ஆலோசனையை கேட்டு, கடைக்குள் புகுந்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த சாக்லெட்டுகளை திருடியதாக தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here