காதலர் தின பரிசால் எட்டு மாதக் குழந்தைக்கு நேர்ந்த கதி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்

0

பிரித்தானியாவில் கிரேட்டர் மான்செஸ்டரில் வாழும் Jackenson Lamour, Brandy Kimberley Harvey தம்பதியரின் மகள் மலேசியா.

எட்டு மாதக் குழந்தையான மலேசியாவை தாயும் தந்தையுமே மாறி மாறி கவனித்து வந்துள்ளார்கள்.

கணவன் இரவுப்பணிக்கு செல்ல, மனைவி பகல் நேரப் பணியிலிருந்து திரும்பி குழந்தையை கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

இரவு 10 மணியளவில் சமையலறைக்கு சென்று கொஞ்சம் பாத்திரம் கழுவலாம் என முடிவு செய்திருக்கிறார் Kimberley.

சமையலறையும் படுக்கையறையும் வெகு தூரத்தில் இல்லை என்பதால், குழந்தையின் சத்தத்தை கவனித்தவாறே வேலை செய்துகொண்டிருந்த Kimberley, திடீரென குழந்தை அமைதியானதை கவனித்திருக்கிறார்.

குழந்தையின் சத்தம் திடீரென கேட்காததும் Kimberley அறைக்கு சென்று குழந்யை கண்ட காட்சி அவரை பதற வைத்துள்ளது.

Jackenson, காதலர் தினத்திற்காக மனைவிக்கு ஒரு இதய வடிவ பலூனை வாங்கிவந்துள்ளதால் அதை தங்கள் கட்டிலில் கட்டி வைத்துள்ளார் Kimberley.

எட்டு மாதக் குழந்தையான மலேசியா, அந்த பலூனை எட்டி எடுக்க முயன்றிருக்கிறாள் போலும். அந்த பலூனின் நூல் அவளது கழுத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

கட்டிலிலிருந்து அவள் கீழே சரியவும், அந்த பலூனில் கட்டப்பட்டிருந்த நூல் அவளது கழுத்தை இறுக்க, குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கிறாள்.

உடனே அந்த நூலை வெட்டிவிட்டு, அவசர உதவியை அழைத்திருக்கிறார் Kimberley.

ஆனால், மருத்துவ உதவிக்குழுவினரால் மலேசியாவைக் காப்பாற்ற இயலாமல் போயிருக்கிறது.

அதே நேரத்தில், பொலிசார் வந்து அக்கம்பக்கத்தில் அந்த குடும்பத்தைக் குறித்து விசாரித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here