காதலனை சந்திக்க சென்ற இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி…

0

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த 41 வயது Sinead Lyons என்பவரே நியூ ஹாம்ப்ஷயர் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடும் பனிப்பொழிவால் உறைந்து போன ஏரியின் ஒரு பகுதியில், அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு நம்புகிறது.

வெள்ளிக்கிழமை மதியம் 2.20 மணியளவில், சிறப்பு குழுவினரின் உதவியுடன், குறித்த பெண்ணின் உடலை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அவர் வெளியே செல்லும் போது கூடவே கொண்டு சென்ற நாய் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை.

இதனிடையே, குறித்த பெண்மணியின் உடலை உரிய அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த பெண்மணி மாயமான நாள் தமது தோழியிடம், காதலரை சந்திக்க செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் தமது நாயுடனே, காதலரை சந்திக்க சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here