
தைவானின் Changhua கவுண்டியில் இருக்கும் Xihu Township-ல் 52 வயது மதிக்கத்தக்க Huang என்ற நபர் சம்பவ தினத்தன்று நன்றாக மதுவில் ஊறவைத்த கோழி நூடுல்ஸை சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார்.
அதன் பின் அவர் கண்விழித்து பார்த்த போது, ஏதோ இரத்தப் போக்கு ஏற்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஏனெனில் அவருடைய பிறப்புறுப்பு வெட்டப்பட்டிருந்தது.
இதை அவருடைய காதலி 40 வயது மதிக்கத்தக்க Phung பெண் சமயலறை கத்தரிக் கோலை பயன்படுத்தி இந்த கொடூரத்தை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதன் பின் Phung-யிடம் விசாரித்த போது, வெட்டி, கழிப்பறையில் வீசிவிட்டதாக கூறியுள்ளார்.
இருப்பினும் மருத்துவர்களால் அதை மீண்டும் இணைக்க முடியவிலை, அந்த வீட்டில் இருந்து இரத்தக் கறையுடைய கத்தரிக்கோலை பொலிசார் கண்டுபிடித்தனர்.
தீயணைப்பு படையின் செய்தித் தொடர்பாளர் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், காயமடைந்த நபர் அதிக அளவில் இரத்தப்போக்கு கொண்டுள்ளார்.
பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செயலில் ஈடுபட்டவர் மோசமான தாக்குதல் என்ற குற்றச்சாட்டை எதிர் கொள்கிறார்.