காணி சுவீகரிப்பு: கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை

0

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது..

கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதன்போது அந்த இடத்தில் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து காணி அளவீடு செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளதுடன் கடற்படை முகாமுக்குள் கலகம் அடக்கும் கடற்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டாபாய கடற்படை முகாம் உள்ள 617 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலான பகுதி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here