காட்டில் ஆடைகளின்றி சுற்றித் திரிந்த பெண்! பேஸ்புக்கால் ஏற்பட்ட மாற்றம்

0

கம்போடியா காட்டில் 20 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தப் பெண் ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

கம்போடியா காட்டில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரின் உணவு தினமும் காணாமல் போனது.இதனிடையே உணவு காணாமல் போனதால் குழப்பமடைந்த அவர் யார் தனது உணவை எடுப்பது என மறைந்து பார்த்துள்ளார்.

அப்போது ஆடைகள் அணியாமலும் உடலில் கீறல்கள் காணப்பட்ட இளம்பெண் ஒருவர் தான் உணவை எடுத்து சென்றுள்ளார் என்பதைக் கண்டறிந்ததோடு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பாதுகாத்து வந்த அந்த பெண்ணை ஒருவர் தன் மகள் என கூறி அழைத்து சென்றுள்ளார்.

இதனிடையே அந்தப்பெண்ணை இருபது ஆண்டுகள் காட்டில் தனியாக வாழ்ந்த பெண் என்ற தலைப்பில் கதைகள் சமூக வலைத்தளங்களில் பரவத்தொடங்கியது. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் அந்த பெண்ணை பார்த்துவிட்டு வியட்நாமைச் சேர்ந்த Pel (70) என்பவர் அவள் தன் மகள் என்றும் அவளுக்கு மனம் சார் மனநலம் பாதிப்பு என்று கூறி பெண்ணின் உடல் அடையாளங்களைக் கூறியதோடு பெண்ணின் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஒன்பது உறவினர்களுடன் வந்து மகளை அழைத்துச் சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here