காச்சலால் பீடிக்கப்பட்ட 6 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு!

0

யாழ்ப்பாணம், தாளையடிப் பகுதியில் காச்சலால் பீடிக்கப்பட்ட 6 வயது சிறுமி பரிதாபகரமக உயிரிழந்தார்.

செம்பியன்பற்று தாளையடியைச் சேர்ந்த பாஸ்கரலிங்கம் சுலோஜனா என்னும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமி, கடந்த 15ஆம் திகதி காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், 16ஆம் திகதி மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக 19ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது 20 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மரண விசாரணையை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here