காங்கேசன்துறை வீடொன்றில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

0

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் வீடொன்றில் இருந்து முதியவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் கடந்த சில தினங்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அயலவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில், காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த முதியவர் சில நாட்களுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார் எனவும், அதனால் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here