காகிதமற்ற நகரமாக மாறிய துபாய் – அரசுக்கு எத்தனை கோடி சேமிப்பு ?

0

அலுவலகப் பணிகளில் 100 % காகிதத்தை பயன்படுத்தாத முதல் அரசாக டுபாய் மாறியுள்ளது.

இது குறித்து டுபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் கருத்துத் தெரிவிக்கையில் ” டுபாய் அரசின் அனைத்து உள் மற்றும் வெளி தொடர்புகள், பரிவர்த்தனைகள், சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது.

எனவே இனி டுபாய் உலகின் முன்னணி டிஜிட்டல் தலைநகராக விளங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காகித பயன்பாடு இல்லா நிர்வாகத்தால் அரசுக்கு 350 மில்லியன் டொலர்கள் அளவுக்கு பணம் மிச்சமாகும் என்றும் இதனால் 14 மில்லியன் மனித வேலை நேரங்களும் இதனால் லாபம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் டுபாய் அரசு இனி 1800 வகையான டிஜிட்டல் சேவைகள் மூலம் நிர்வகிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here