கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் சிலம்பரசன்!

0

நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் சிம்புவுக்கு டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் அவர்கள் அளித்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுடன் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு மற்றும் பிரபல தொழிலதிபர் விஜி சந்தோஷம் உள்பட ஒருசிலருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிம்பு தனது தாய் உஷா மற்றும் தந்தை டி ராஜேந்தர் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டாக்டர் பட்டம் பெற்ற சிம்புவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here