கவின் ஜோடியாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை நடிகை!

0

கவின் நடத்த ’லிப்ட்’ திரைப்படம் நல்ல வெற்றி அடைந்ததை அடுத்து அவருடைய அடுத்தப் படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு ‘ஊர்க்குருவி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தை விக்னேஷ் சிவனின் உதவியாளர் அருண் பேட்ரிசியான் என்பவர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை சம்பவத்தின் அடிப்படையாக கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தெரியவந்து உள்ளது.

இந்த படத்தில் நாயகியாக காவ்யா அறிவுமணி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ’பாண்டியன் ஸ்டோர்’ என்ற சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் பாரதிகண்ணம்மா சீரியல் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here