கல்வியமைச்சருடனான பேச்சுவார்தை தோல்வி: கற்பித்தல் புறக்கணிப்பு தொடர்கிறது!

0

ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் இடையில் இன்று (20) காலை இடம்பெற்ற சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

இதனை, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை (22) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகள் தொடர்பான தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண அடுத்த திங்கட்கிழமை (26) கூடும் அமைச்சரவையில் திட்டமொன்றை சமர்ப்பிப்பதாக அமைச்சர் உறுதியளித்த போதிலும், நிரந்தர தீர்வு காணப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட தயாராக இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here