கல்விப்பொதுத்தராதர சாதரணதர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

0

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதரணதர பரீட்சைகளை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல் எம் டீ தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்

அதற்கமைய, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை கல்விப்பொதுத்தராதர சாதரணதர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதரணதர பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் மற்றும் காலஅட்டவணை ஆகியன பாடசாலை அதிபரூடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் கால அட்டவணை ஆகியன பரீட்சார்த்திகளின் சொந்தமுகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here