கலிபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்..

0

உலக நாடுகளை குரங்கம்மை தொற்று அச்சுறுத்தி வருகின்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை பிறபிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய ஆளுநர் கேவின் நியூசம் குரங்கம்மை பரவலை தடுக்கவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நியூயார்க் மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, தற்போது கலிபோர்னியாவிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் இதுவரை 827 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்க்கிற்கு அடுத்தபடியாக குரங்கம்மை பாதிப்பில் இரண்டாவது இடத்தில் கலிபோர்னியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here