கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடித்த நபர்…! காரணம் என்ன?

0

ஆண் குழந்தை பிறக்க கர்ப்பிணியின் தலையில் ஆணியை அடித்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பெண் ஒருவர் சென்றுள்ளார்.

அவர் தனது தலையில் இருந்த ஆணியை அகற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

தற்போது கர்ப்பம் தரித்துள்ளதால் இந்தப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்க சடங்குகளைச் செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் பரிந்துரைத்தேன்.

அவரோ, எனது தலையில் 5 செ.மீ அளவிலான ஆணிகள் ஐந்தை அடித்து அனுப்பினார்.

எனக்கு அதனால் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. எனவே அதை அகற்ற வேண்டும் கூறியுள்ளார்.

அந்த ஆணிகள் மூளையில் தொடவில்லை. ஆணி அறையப்பட்டதால் மிகுந்த வலியில் இருந்த பெண் முதலில் தானே ஆணியை அறைந்து கொண்டதாகக் கூறினார்.

பின்னர்தான் அவர் தலையில் ஆணியை மற்றொரு நபர் அறைந்தது தெரியவந்தது” என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் தலையில் இருந்து ஆணியை அப்புறப்படுத்தி அனுப்பினர்.

இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவரை விசாரித்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யப்போவதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here