கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி பெறுவது குழந்தைகளுக்கு பாதுகாப்பு….. ஆய்வு தகவல்

0

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் அது அவர்களின் குழந்தைகளுக்கும் பாதுகாப்புத் தரும் என இஸ்ரேல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வை, ஜெருசலத்திலுள்ள Hadassah பல்கலைக்கழக மருத்துவ நிலையம் நடத்தியது.

பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் பிரசவத்திற்கு மூன்று மாதமே உள்ள 20 பெண்கள் பங்கேற்றனர்.

இதன்போது அனைவருக்கும் இரண்டு முறை Pfizer-BioNTech தடுப்பூசி போடப்பட்டது.

அதன் பின்னர் நடந்த ஆய்வில், கர்ப்பிணிகளுக்கும் அவர்களுக்கு பிறந்த சிசுக்களுக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, கர்ப்பகாலத்தின் வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு தடுப்பூசிகளின் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பதை அறிவியல்பூர்வமாகத் தெரிந்துகொள்ள, அ ஆய்வு அவசியம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தடுப்பூசி கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த Pfizer-BioNTech நிறுவனம், சர்வதேச அளவில், ஆரோக்கியமான சுமார் 4,000 கர்ப்பிணிகளிடம் சோதனையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here