கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கிய கொரோனா தடுப்பூசியின் ஆய்வு முடிவு…!

0

அமெரிக்காவில் உள்ள Massachusetts பொது மருத்துவமனை, Brigham மற்றும் மகளிர் மருத்துவமனை மற்றும் Ragon Institute of MGH, MIT மற்றும் Harvard ஆகியவற்றின் வல்லுநர்கள் ஆய்வொன்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதில் மாடர்னா அல்லது ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை 131 பெண்களுக்கு செலுத்தப்பட்டு ஆராய்ச்சியாளர்கள் தகவல்களை சேகரித்துள்ளனர்.

இந்த 131 பேரில் 84 பெண்கள் கர்ப்பமாக உள்ளனர், 31 பேர் பாலூட்டுகின்றனர், 16 பேர் கர்ப்பமாகாத இளம் பெண்கள் உள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் டிசம்பர் 17, 2020 முதல் மார்ச் 02, 2021 வரை தரவுகளை சேகரித்தனர்.

எல்லா பெண்களிலும், தடுப்பூசியால் தூண்டப்பட்ட ஆன்டிபாடி அளவுகள் ஒரே மாதிரியாக இருந்தன.

இந்த தடுப்பூசிகள் இந்த பெண்களின் உடலில் நம்பமுடியாத அளவிற்கு திறம்பட செயல்படுவதாக தெரிகின்றது.

பாலூட்டும் பெண்கள் தங்கள் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலமும், கர்ப்பிணி பெண்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நஞ்சுக்கொடி மூலமும் பாதுகாப்பு ஆன்டிபாடிகளை அனுப்பியதையும் ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளில் இந்த பாதுகாப்பு ஆன்டிபாடிகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை.

கர்ப்ப காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒப்பிடுகையில் ஆன்டிபாடி அளவுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான நோய் மற்றும் பாதகமான விளைவுகளுக்கு அதிக ஆபத்து இருப்பதாக Centers for Disease Control and Prevention (CDC) எச்சரிக்கிறது.

இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் கிட்டத்தட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானதா என்பதை ஆராய CDC முடிவெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here