கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்க முடியும்….

0

உலகளவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றும், இறப்பும் அமெரிக்காவில் குறைந்துள்ளது.

இதுவரையிலும் 39 சதவீத மக்கள் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் கூறுகையில், 35,000 பெண்களுக்கு மாடர்னா மற்றும் பைஸர் கொரோனா தடுப்பூசிகளைப் பரிசோதனை செய்ததில் கருக்கலைப்பு, குறை பிரசவம் போன்ற எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்பட்டதோ அதே பக்கவிளைவுகள்தான் அப்பெண்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here