கர்ப்பிணிப் பெண்ணை கத்தியால் குத்திய கொடூரன்….

0

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் பொர்ன்க்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆஸ்கர் அல்வெஸ்(Oscar Alves).

இவரும் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த லிவ் அப்ரு (Liv Abru) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் லிவ் – இன் டு கெதர் கெமுறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 2018 ஆண்டு லிவ் அப்ரு(Liv Abru) கருவுற்றுள்ளார்.

ஆனால், லில் அப்ருவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை தான் இல்லை.

லிவ் அப்ரு(Liv Abru) வேறு நபருடன் உறவில் இருந்ததாலேயே கர்ப்பமடைந்ததாக அவரது காதலன் ஆஸ்கர் அல்வெஸ் (Oscar Alves) கருதியுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2018 மார்ச் 21 ஆம் திகதி இரவு 1 மணியளவில் இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்கர் அல்வெஸ் (Oscar Alves) மற்றும் அவரது காதலி லிவ் அப்ரு(Liv Abru) இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு 26 வார கர்ப்பிணியான லிவ் அப்ருவை, ஆஸ்கர் (Oscar Alves) சரமாரியாக வயிற்றில் குத்தியுள்ளார்.

இதில் இரத்தவெள்ளத்தில் லிவ் அப்ரு(Liv Abru) சரிந்துவிழுந்தார்.

இதையடுத்து, அங்கிருந்து ஆஸ்கர் தப்பியோடிவிட்டார்

லிவ் அப்ருவின்(Liv Abru) அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடுமையான கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானதால் லிவ் அப்ருவின் (Liv Abru)குழந்தை கருவிலேயே உயிரிழந்துவிட்டது.

தப்பியோடிய ஆஸ்கரை பொலிஸார் சம்பவம் நடைபெற்ற நாளிலே கைது செய்தனர்.

கர்ப்பமான காதலிக்கு காதலன் செய்த கொடூர சம்பவம்! - கனடாமிரர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here