கர்ப்பிணிப் பெண்களும் கொரோனா தடுப்பூசி…! ஆய்வில் உறுதி…!

0

கர்ப்பிணிப் பெண்களுக்குக் கோவிட் தடுப்பூசி போடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைய, தடுப்பூசி செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு இதுவரை எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது நிலவும் அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூடிய விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது என அவர் வலியுறுத்தினார்.

அதன்படி, கர்ப்பிணித் தாய்மார்கள், கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்துள்ள பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பது பொருத்தமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here