கர்ப்பிணிப் பெண்களுக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்த தடை

0

பிரேசிலில் கர்ப்பிணிப் பெண்கள் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி 35 வயது கர்ப்பிணி பெண் ஒருவர், அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்புக்கு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவே காரணம் என கூறப்படுகிறது.

இது குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என பிரேசில் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு பயன்பாட்டில் இருக்கும் ஏனைய தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்கள் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் அஸ்ட்ராசெனெகா, சினோவெக் மற்றும் பைசர் ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here