கர்ப்பிணிப்பெண்ணை கொடூரமாக கொலை…. பின்னர் தெரியவந்த திடுக் உண்மை

0

பிரேசிலில் Pamella Ferreira Andrade Martins (21) எட்டு மாத கர்ப்பிணிப்பெண் குளியலறையில் இறந்துகிடந்துள்ளார்.

அவரது வயிற்றிலிருந்த குழந்தை மாயமாகியுள்ளது.

இந்நிலையில் அவரது குழந்தையை பொலிசார் தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு 22 வயதுள்ள ஒரு பெண், குழந்தை ஒன்றுடன் சென்ற நிலையில் அக்குழந்தை இறந்துள்ளது.

வீட்டில், தானே குழந்தை பெற்றுக்கொண்டதாகவும், குழந்தையுடன் படியிலிருந்து இறங்கும்போது தடுக்கி விழுந்துவிட்டதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார்

ஆனால், மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமடையவேயில்லை என்பது தெரியவந்தது.

ஆகவே, பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, பொலிஸ் விசாரணையில், அந்த பெண் கர்ப்பமுற்றிருப்பதுபோல் நடித்துவந்ததும், சம்பவம் நடப்பதற்கு முன்தினம், அவர் Pamellaவுடன் கூட இருந்ததும் தெரியவந்துள்ளது.

குழந்தை எப்படி இறந்தது என்பதை அறிவதற்காக, அதற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் ஒரு கர்ப்பிணிப்பெண்ணை கொடூரமாக கொலை செய்து, அவரது வயிற்றை வெட்டி குழந்தையை எடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here