கர்ப்பம் தரிப்பதை ஒத்திவைக்குமாறு பெண்களுக்கு அறிவுறுத்தல்

0

உலக அளவில் உருமாறிய கொரோனா அதிகம் பிரேசிலில் கண்டறியப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனாவின் பாதிப்பு அதிதீவிரமாக உள்ளதால் பிரேசிலில் நாள்தோறும் 3000-க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இதுவரை 368,749 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டு சுகாதாரத்துறை பெண்களுக்கு புதிய அறிவுரையை வழங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மோசமான காலம் கடந்து செல்லும் வரை கர்ப்பம் தரிப்பதை தவிர்க்குமாறு பிரேசில் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் இந்த சூழலில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளும் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

கருத்தரிப்புக்கு முயற்சிக்கும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த அறிவுரை வழங்கமுடியாது.

ஆனால் இளம் தலைமுறையினர் இந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ளுமாறு பிரேசில் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here