கருவைக் கலைக்க கணவனின் கொடூரச் செயல்… மனைவிக்கு நேர்ந்த கதி

0

இந்தியாவில் கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த்.

கூலித் தொழிலாளியான இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இதையடுத்து விஜயலட்சுமி மூன்றாவது முறையாக கர்ப்பம் அடைந்தார்.

ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் என்பதால், இந்த முறை அரவிந்த் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என நினைத்துள்ளார்.

அரவிந்த் மனைவியை ஸ்கேன் செண்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஸ்கேன் செண்டரில் பெண் குழந்தை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த அரவிந் மனைவியிடம் இந்த குழந்தையை கலைத்துவிட செல்லியுள்ளார்.

ஆனால் விஜயலட்சுமி இதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று, அரவிந்த் வீட்டிற்கு இரண்டு பேரை அழைத்து வந்துள்ளார்.

அப்போது அவர்கள் விஜயலட்சுமியை வலுக்கட்டாயமாக பிடித்து கருவலை கலைக்க முயன்றுள்ளனர்.

இவர்களிடம் தன்னையும் வயிற்றில் உள்ள பிஞ்சுவையும் காப்பாற்றி கொள்ள விஜயலட்சுமி போராடியுள்ளார்.

ஆனாலும், கத்தி எடுத்து விஜயலட்சுமியின் வயிற்றை கத்தியால் அறுத்து, கருவை கலைத்துள்ளனர்.

இதனால் விஜயலட்சுமிக்கு இரத்தப் போக்கு அதிகம் ஏற்பட்டு, அதிகம் வெளியேறவே, மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து வலி பொறுக்க முடியாமல் விஜயலட்சுமி அலறியதைக் கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்.

அவர் இருக்கும் நிலையைக் கண்டு, உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here