கருங்கடலில் ரஷ்ய போர்க்கப்பல்கள்…. அதிகரிக்கும் பதற்றம்

0

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 8 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.

இந்நிலையில்,உக்ரைன் எல்லையை ஒட்டி கருங்கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பல்கள் முகாமிட்டுள்ள

வான்வழித்தாக்குதல்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகின்றது.

உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கருங்கடல் பகுதியில் பியோட்டர் மார்க்னோவ், புரோஜெக்ட்-1171, புரோஜெக்ட்-775 ஆகிய போர் கப்பல்களை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போர்க்கப்பல்கள் ஆழம் குறைவான கடற்பகுதிகளிலும் இயக்க வல்லவை என்றும், ஒவ்வொரு போர்க்கப்பலிலும், தலா 500 வீரர்கள், 4 தாக்குதல் ஹெலிகாப்டர்களை ஏற்றிச்செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here