ஜேர்மனியின் புதிய அரசாங்கம் நாஜி கால கருக்கலைப்பு சட்டத்தை ரத்து செய்துள்ளது.
கருக்கலைப்பு பற்றிய தகவல்களை மருத்துவர்கள் வழங்குவதைத் தடுக்கும் நாஜி காலச் சட்டத்தை ஜேர்மனியின் புதிய அரசாங்கம் ரத்து செய்கிறது.
இந்த சட்டம் நீக்கப்படுவதன் மூலம், வழக்கு தொடரப்படும் என்று பயப்படாமல், கருக்கலைப்பு பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க மருத்துவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த சட்டத்தின் கீழ், சமீப காலம் வரை, கருக்கலைப்பு செய்வதை மருத்துவர்கள் வெளிப்படையாகக் கூற அனுமதிக்கப்படவில்லை.
அந்தச் சட்டம் 2019 இல் ஒரு சமரசத்தில் திருத்தப்பட்டது
அதாவது கர்ப்பத்தை நிறுத்துவதாக மருத்துவர்கள் கூறலாம்.
ஆனால் அத்தகைய நடைமுறைகள் குறித்த கூடுதல் தகவல்களை வழங்க அனுமதிக்கப்படவில்லை.
தொழில்நுட்ப ரீதியாக, ஜேர்மனியில் கருக்கலைப்பு முற்றிலும் சட்டவிரோதமானது.