கம்பளையில் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய குடும்பம்

0

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை எனும் இடத்தில் 2 மாடி வர்த்தகநிலையமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

அத்துடன்அப்பகுதி தாழிறங்கும் அபாயம் இருப்பதால் ஒரு வழி போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி வர்த்தக நிலையம் முற்றாக சரிந்து விழுந்துள்ளது. பொருட்கள் அனைத்து மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.

வர்த்தக நிலையத்தில் இருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு, உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்த தருணத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதனால் மூவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here