பிரபல பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சினேகன் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்யப்போகிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின் பாண்டவர் பூமி படத்தில் அனைத்துப் பாடல்களும் எழுதியதன் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் சினேகன்.
பிக்பாஸ் 1 சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற இவர் சாமி, சூரரைப் போற்று, ராம் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக சினேகன் மற்றும் கன்னிகா ரவி காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் தற்போது இந்த திருமணம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இன்று அவர்களின் திருமணம் கமலஹாசன் முன்னிலையில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

