கமலுக்கு கொரோனா… விக்ரம் படப்பிடிப்பில் பாதிப்பா?

0

நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் நடித்து வரும் விக்ரம் படப்பிடிப்பில் பெரியளவில் பாதிப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுவாச குறைவு, காய்ச்சல் மற்றும் தொற்று நோய் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் கோயம்புத்தூரில் கமல் இல்லாத காட்சிகளை முழுவதுமாக படமாக்கி முடித்துவிட்டாராம் லோகேஷ் கனகராஜ். அதனால் கமல் காட்சிகளை கடைசியாக படமாக்கிக் கொள்ளலாம் என தள்ளிவைக்கப் பட்டுள்ளதாம். இதனால் விக்ரம் படப்பிடிப்பில் பெரிய பாதிப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here