கமலின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது

0

நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டே வெளியிடப்பட்டாலும், கமலின் அரசியல் பணிகள் காரணமாக படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.

இதனிடையே தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். மேலும் கமல்ஹாசனுடன் விமானத்தில் பயணிக்கும் போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ் ‘ஆரம்பிக்கலாங்களா’ என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது உறுதியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here