கனேடியர்களை எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்….

0

கனடாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்நதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் பரபரப்பானது.

இப்போது, 79 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியாவது பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கனடாவில் இன்னமும் 12 வயதுக்கு மேற்பட்ட ஆறு மில்லியன் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

ஜூன் 16 ஆம் திகதிக்கு பின் தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை 100,000க்கு கீழேயே காணப்படுகின்றது.

இதே வேகத்தில் சென்றால், மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி அளித்து முடிப்பதற்கு இன்னும் குறைந்தது பல மாதங்கள் ஆகும்.

இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃப்ரேஸர் பல்கலைக்கழக தொற்று நோய் சிறப்பு நிபுணரான Caroline Colijn என்பவர் தெரிவிக்கையில்,

கனடாவைப் பொருத்தவரையில், எந்த அளவுக்கு தடுப்பூசி அளிப்பது, கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவதற்கேற்ற பாதுகாப்பான நிலையை உருவாக்கும் என்பதை கணிப்பது கடினம் என கூறியுள்ளார்.

ஆகவே, மீண்டும் தடுப்பூசி அளிக்கும் திட்டத்தை வேகப்படுத்தினால் மட்டுமே கொரோனாவின் நான்காவது அலையைத் தவிர்க்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here