கனேடியர்களை அச்சுறுத்தும் பேராபத்து… நிபுணர்கள் எச்சரிக்கை

0

கனடாவில் மீண்டும் கொவிட் பெருந்தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கொவிட் சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கோடை காலத்தில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒமிக்ரோன் திரிபின் உப திரிபுகளினால் இவ்வாறு தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் ஒமிக்ரோனின் BA.4 மற்றும் BA.5 ஆகிய ஒமிக்ரோனின் உப திரிபுகளினால் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்பொழுது தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் வைத்தியசாலை அனுமதி என்பன குறைந்தளவில் காணப்படுவதாக கனேடிய பொதுச் சுகாதார அலுவலக பிரதானி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்று அதிகரிப்பு தொடர்பில் போதியளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here