கனேடியர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

0

கனடாவில் கடந்த சி நாட்களாக மோசடிகள் இடம்பெறுவதால் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சில நபர்கள் தீயனைப்புப் படையினர் என்ற போர்வயில் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு வருகினறனர்.

போலியான பாதுகாப்பு கருவிகள் (safety kits) விற்பனை செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

கனடாவின் ஹால்டன் பகுதியில் இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

ஹால்டனின் பர்லிங்டன் தீயனைப்புப் பிரிவினர் பாதுகாப்பு கருவிகளை விற்பனை செய்யவில்லை.

மேலும் மோசடி கும்பல் ஒன்று போலியாக விற்பனை செய்து வருவதாகவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஹால்டன் பொலிஸார் டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் மக்களை தெளிவூட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here