கனேடியர்களுக்கு அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு..!

0

ஒன்ராறியோ மாகாணமும், கனேடிய பெடரல் அரசும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு 13.2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான குழந்தைகள் நலத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

குழந்தைகளை பகல் நேரக் காப்பகங்களில் விடும் பெற்றோருக்கு உதவும் வகையில் திட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது.

ஒன்ராறியோ பிரீமியரும், கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் இத்திட்டம் குறித்த அறிவிப்பை ஒன்ராறியோ மக்களுக்கு வெளியிட்டார்கள்.

அதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல், உரிமம் பெற்ற பகல் நேர குழந்தைகள் காப்பகங்களில் குழந்தைகளை விட, நாளொன்றிற்கான கட்டணம் 25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 12 டொலர்களாக ஆக்கப்பட உள்ளது.

பின்னர், டிசம்பர் மாதத்திலிருந்து மீண்டும் இந்தக் கட்டணம் குறைக்கப்பட உள்ளது.

தற்போது, பகல் நேர குழந்தைகள் காப்பகங்களுக்கு மக்கள் நாளொன்றிற்கு 46 டொலர்கள் கட்டணம் செலுத்துகிறார்கள்.

2025 ஆம் ஆண்டில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பகல் நேர குழந்தைகள் காப்பகங்களில் விட, நாளொன்றிற்கு 10 டொலர்கள் மட்டும் செலுத்தும் நிலை உருவாகும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here