கனடாவில் ரொரன்றோவில் வாழும் ஜேம்ஸ் (45), இரண்டு பிள்ளைகளின் தந்தை.
அவரது தந்தை பல ஆண்டுகளாக ஒரே எண்ணில் LOTTO 6/49 என்ற லொட்டரி விளையாட்டை விளையாடுபவர்.
தந்தை இறந்த பிறகு ஜேம்ஸும் அதே எண்களில் விளையாடத் ஆரம்பித்துள்ளார்.
பல ஆண்டுகளாக அவர் அந்த ஒரே எண்ணில் விளையாடி வந்தார்.
இந்நிலையில், தற்போது அவருக்கு 100,000 கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.
மகிழ்ச்சியில் திளைத்துப்போயிருக்கும் ஜேம்ஸ், தனது வீட்டில் சில புதுப்பித்தல்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.
ஜேம்ஸ் பிறகு குடும்பத்துடன் கொஞ்சம் சுற்றுலா செல்வதென்றும் திட்டமிட்டுள்ளார்.