
கனடாவில் ஸ்காபரோவில் உள்ள மார்க்கம் வீதியில் இரவு TTC பேருந்து மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.
32 வயதுடைய நபர் திங்கட்கிழமை மதியம் 12:49 மணியளவில் Markham Road மற்றும் Blakemanor Boulevard அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பயணிகளை ஏற்றிக்கொண்டு வடக்கு நோக்கிச் சென்ற TTC பேருந்து ஒன்று இவ்வாறு மோதியுள்ளது.
குறித்த நபர் விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் லாரா பிரபாண்ட் தெரிவித்துள்ளார்.