கனடா விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு… அதிகாரிகள் அறிவுறுத்தல்…

0

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லொறி ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்கிற அரசின் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கடந்த மாதம் 29 ஆம் திகதி தலைநகர் ஒட்டாவாவில் ‘சுதந்திர அணிவகுப்பு’ என்கிற பெயரில் லொறி ஓட்டுநர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது கனடா அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவால் ஈர்க்கப்பட்டு நியூசிலாந்து, ஐரோப்பாவிலும் இதுபோன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு போராட்டகாரர்கள் வருவதால், அங்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஒட்டாவா போக்குவரத்து ஏஜென்சி தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து, ஓசை எழுப்பி, கொடியை அசைத்து வருகின்றனர்.

போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலைக்கு ஏற்ப பயணிகள் நேரத்தை திட்டமிடுமாறு ஒட்டாவா போக்குவரத்து ஏஜென்சி அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here