கனடாவில் ஒன்றாரியோ வாழும் மக்கள் கொரோனா தொற்று பரவல்களுடன் தொடர்ந்தும் போராடி வருகினறனர்.
இந்நிலையில் முகக்கவசம் அணியும் பிரச்சனை பாரிய பிரச்சனையாக கடந்த சில நாட்களாக நீடித்து வருகின்றது.
அரசு கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் முழுமையாக நீக்கியுள்ளது.
இந்நிலையில் முகக்கவசம் அணிவதை மாத்திரம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் முகக்கவசம் அணிவதற்கெதிராக செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகக்கவசம் அத்தியவசியமானது அல்ல அது எமது உடையின் பிரதான அங்கம் அல்ல என்ற மக்களின் கருத்துக்களின் மத்தியில் அரசு தொடர்ந்தும் முகமூடிகளை அணியுமாறு அறிவித்தி வருகின்றது.
அதேவேளை ஒன்றாரியோவில் தினமும் பதினைந்திற்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.