கனடா மக்களுக்கு பிரதமரின் முக்கிய தகவல்…!

0

கனடாவில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கனடாவில் சனிக்கிழமை வரை 7,785,807 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

அதாவது நாடு முழுவது 784,671பேர் அல்லது 2.1 சதவீதம் மக்கள் முழுவதுமாக தங்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கோடைகாலத்தின் முடிவில் ஒவ்வொரு கனேடியரும் முழுமையாக தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் செப்டம்பர் இறுதிக்குள் தடுப்பூசி போடுவதே கனடா அரசாங்கத்தின் அசல் குறிக்கோளாக இருக்கிறது.​​

மார்ச் மாத இறுதிக்குள் 6 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படும் என திட்டமிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதையும் கடந்து சுமார் 9.5 மில்லியன் டோஸ்கள் செலுத்தப்பட்டுக்கிறது என ட்ரூடோ கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here