கனடா பூங்காவில் இறந்துகிடக்கும் அணில்கள்… வெளியாகிய தகவல்

0

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ஒரு பூங்காவில், மரங்களின் அடியில் அணில்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்துள்ளது.

அதை கண்ட ஒருவர் அது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Richmondஇல் அமைந்துள்ள அந்த பூங்காவில் பல அணில்கள் இறந்துகிடந்த நிலையில் பல அணில்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த அணில்களின் உடலில் நச்சுப்பொருள் ஒன்று இருப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட ஆய்வில், பைன் மரங்களைத் தாக்கும் ஒருவகை வண்டுகளால் அந்த நச்சுப்பொருள் உருவாகுவது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நச்சை உட்கொண்டதால்தான் அந்த அணில்கள் இறந்ததாகவும், நோய்வாய்ப்பட்டதாகவும் நம்பப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here