கனடா பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

0

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், கொரோனா பாதிப்பு தமக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் தாம் நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, இந்த வாரம் முழுமையும் தாம் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற இருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமது பிள்ளைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சுய தனிமைப்படுத்திக்கொண்டார்.

ஆனால், தடுப்பூசி மறுப்பாளர்கள் முன்னெடுத்த லொறி பேரணிக்கு பயந்து அவர் தலைநகரில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு தப்பிச் சென்றதாக உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here