கனேடிய அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், கனரக லொறி ஓட்டுநர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்களின் ஹாரன்களை நீண்ட நேரத்திற்கு ஒலிரச் செய்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டனர்.
இதன் காரணமாக ஒட்டாவா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக நகர மேயர் ஜிம் வாட்சன் அறிவித்துள்ளார்.
லொறி ஓட்டுனர்களின் ஆர்ப்பாட்டம் பொதுமக்களுக்கும் வணிகத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்நிலையில் வாகன ஓட்டிகளின் கைகளுக்கு விலங்கு பூட்டுவது போல் அடுத்த 10 நாட்களுக்கு ஹாரன்களை ஒலிக்க தடை விதித்து நீதிபதி ஹக் மெக்லீன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஹாரன் அடிப்பதற்கான தடை ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்பிற்கான உரிமையைப் பறிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.