கனடா இளைஞரின் மிகப்பெரிய சாதனை!

0

உலகில் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மரங்களை பாதுகாத்தல் மற்றும் புதிய மரக்கன்றுகளை நடுதல் போன்ற விழிப்புணர்வை உலக அமைப்புகள் தற்போது வழியுறுத்தி வருகின்றனர்.

கனடாவின் கியூபெக்கைச் சேர்ந்த அண்டோயின் மோசஸ் தனது 17 வயதில் மரக்கன்றுகளை பொழுதுபோக்காக விதைக்க ஆரம்பித்துள்ளார்.

தற்போது தனது 23 வயதில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி வெறும் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 23 ஆயிரத்து 60 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளார்.

அண்டோயின் மோசஸ்(Antoine Moses) தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here