கனடாவை தொடர்ந்து நியூஸிலாந்திலும் கட்டாய கொவிட்-19 தடுப்பூசிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் வெலிங்டனில் கூடிய, நூறுக்கும் மேற்பட்ட பாரவூர்திகளுடன் அதன் சாரதிகள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை கடந்து செல்லும் பாரவூர்திகளின் சாரதிகள் கட்டாயம் கொவிட் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா முன்னதாக அறிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கனடாவின் சில பகுதிகளில் தொடர்ந்தும் சாரதிகள் வீதியை மறித்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது.
இந்நிலையில், தற்போது ஏனைய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.
இதற்கமைய, நியூஸிலாந்து, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் கட்டாய தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.