கனடாவை அச்சுறுத்தும் மர்மமான மூளை நோய்…! அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

0

கனடாவில் Creutzfeldt-Jakob நோய் போல் இருக்கும் மர்மமான மூளை நோய் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, New Brunswick பகுதியில் 43 பேர் மர்மமான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து வருவதாக கனடா அதிகாரிகள் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2015-ல் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்ட போதிலும் சமீபத்திய ஆண்டுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2020-ல் 24 பேரும், இந்த ஆண்டு இதுவரை 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இது Creutzfeldt-Jakob நோய் என முதலில் மருத்துவர்கள் சந்தேகித்த நிலையில், தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதற்கான ஆதராங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

மர்மமான மூளை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வலி, பிடிப்பு, அறிவாற்றல் வீழ்ச்சி, தசை விரயம் மற்றும் பற்கள் நடுங்குவது போன்ற அறிகுறிகளுடன் காணப்படுவாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட் பெரும்பாலானோர் வடகிழக்கு நியூ பிரன்சுவிக்கில் உள்ள அகாடியன் தீபகற்பத்திலும், தென்கிழக்கு நியூ பிரன்சுவிக் நகரில் உள்ள மோன்க்டனுக்கு அருகிலும் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உட்பட்டிருப்பதால், இந்த நோய் சுற்றுச்சூழல் நச்சுகளான B-methylamino-L-alanine (BMAA) மற்றும் டோமோயிக் அமிலம் போன்றவற்றால் ஏற்படக்கூடும் என சந்தேகிகம் எழுந்துள்ளது.

இந்த நோய்க்கான காரணத்தை அடையாளம் காண பல ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here