கனடாவில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி…. !

0

கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட ஜமைக்கா நாட்டை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு நினைவஞ்சலி இடம்பெற்றுள்ளது.

14 வயதான Taffash Riley ஜமைக்காவில் பிறந்து பின்னர் கனடாவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர்

இவர் Mississaugaவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் படிக்கட்டில் நடந்து வந்த போது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மர்மமான முறையில் சுட்டு கொல்லப்பட்டார்.

இரவு 9 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் கொலை நடந்ததற்கான சூழ்நிலைகள் மற்றும் காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையில் சிறுமி வசித்த வீட்டின் அருகே வசிக்கும் நபர்கள் சேர்ந்து நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனிடையில் Taffash உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லவும் குடும்பத்தினர் விரும்புகின்றனர்.

ஆனால் அதற்கு அதிகளவில் செலவாகும் என்பதால் சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here