கனடாவில் வேலை செய்ய எண்ணுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்….

0

தற்போது கனடாவில் 874,700 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக கனடா புள்ளிவிவரங்கள் துறையின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாத தரவுகளைப் பார்க்கும்போது வேலை வெற்றிடங்கள் அக்டோபர் மாதத்தை விட 9.3 சதவிகிதம் குறைந்துள்ளன.

இந்நிலையில் கொரோனா ஆரம்பிப்பதற்கு முற்பட்ட காலகட்டத்தைவிட அதிக அளவில் பணிகள் காணப்படுகின்றது.

நவம்பர் நிலவரப்படி, குறிப்பாக போக்குவரத்து மற்றும் பொருட்கள் சேமிப்பகங்களில் அதிகபட்சமாக 51,500 பணியிடங்கள் காலியாக இருந்துள்ளன.

மேலும், தங்குமிடம் மற்றும் உணவகத்துறை, சுகாதாரத்துறை மற்றும் கட்டுமானத்துறையில் அதிக பணியிடங்கள் உள்ளன.

நவம்பர் நிலவரப்படி, தங்குமிடம் மற்றும் உணவகத்துறையில் 130,100 காலியிடங்களும், சுகாதாரத்துறையில் 119,600 காலியிடங்களும், கட்டுமானத்துறையில் 67,800 வெற்றிடங்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவற்றில் நவம்பர் மாதத்திலேயே 37,200 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

874,700 பணி வெற்றிடங்கள் உள்ளதாக கனடா புள்ளிவிவரங்கள் துறையின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here