கனடாவில் வீடொன்றுக்குள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்….

0

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

அதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் Richmond. Garden City, வீதிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

வீடு ஒன்றுக்குள் துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here