கனடாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து…!

0

கனடாவின் எட்மண்டன் பகுதிக்கு வடமேற்கில் உள்ள St. Albert பகுதியில் அமைந்துள்ள முதியோர் குடியிருப்பில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் பற்றிய தீ பயங்கரமாக பரவியுள்ளது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இரண்டு பேர் புகையை சுவாசித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடும் நேரத்தில், பொலிசார் அந்த பகுதிக்கு வேறு மக்கள் வராமல் தடை செய்ததோடு, அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்போரை வெளியேற்ற உதவியுள்ளனர்.

மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, அந்த மக்களை St. Albert Alliance Church என்ற தேவாலயத்தின் பொறுப்பாளர்கள், தங்கள் தேவாலயத்தில் தங்கவைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here